இந்த பலன் எல்லா ராசிக்காரர்கள் லக்கினக்காரர்களுக்கும் பொருந்தும்
பலன்கள்:
இன்று அழகு பொருட்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவது சம்மந்தப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.
தொழில் விருத்தி செய்து கொள்ள பணஉதவி கிடைக்கும்.
திருமண மண்டபங்கள், அழகு நிலையங்கள், ஃபேன்ஸி ஸ்டோர், திருமணம் அமைப்பவர்கள், மீடியாவில் வேலை பார்ப்பவர், அம்மன் கோவிலில் பணி செய்பவர்,பைனான்ஸ் செய்பவர்களை சந்திப்பீர்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் எண்ணம் உண்டாகும்.
கணவன், மனைவி உறவுகளில் கவனம் தேவை.
நாய்கள், செல்லபிராணிகளுக்கு அழகிய உபகரணங்கள் வாங்குவீர்கள்.
சகோதரர் அல்லது நண்பர் மனைவியுடன் உறவுகளில் பிரச்சினை ஏற்படும்.
சகோதரி, மாமா, அத்தை உறவுகளில் மனக்கசப்பு ஏற்பட்டு சரியாகும்.
லவ்பேர்ட்ஸ்,வண்ண மீன்கள் வாங்க ஆர்வம் ஏற்படும்.
அம்மன் கோவில் செல்வீர்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை கிடைக்கும்.
பணம் சம்பாதிக்க வேண்டும் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகும்.
பெண்கள் தங்கள் தோழிகளின் காதல் சம்மந்தப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம்.
தலையில் இளநரை உள்ளவர்களை இன்னும் மூன்று நாட்களுக்குள் பார்க்கும் வாய்ப்பு உண்டு.
சகோதரியின், காதலியின் உடல்நலனில் கவனம் செலுத்துவீர்கள்.
திடீரென வேலையில் மாற்றம் ஏற்படும்
சிலருக்கு புதிய தொழில் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் வரும்.
தலை நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சரியான மருத்துவம் கிடைக்கும்.
கிட்னி நோய்களுக்கும் அறுவை சிகிச்சைக்கும் வாய்ப்பு உள்ளது.
இன்று செல்வி, ஸ்ரீ, மலர்கொடி, சாருலதா, திரு, சுந்தர், மலர்வாகனம், பூங்கொடி, திருப்பதி, மல்லிகா, ஜெயலட்சுமி, தாமரை,ஸ்ரீபதி ஆகிய பெயர் உள்ளவர்களை சந்திப்பீர்கள் அல்லது அவர்கள் பற்றி பேசுவீர்கள்.
வட்டி பணம், வாகனம், திருமணம்,அழகு பொருட்கள் சம்மந்தப்பட்ட செய்திகள் வலம் வரும்.
உதகை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டம் சம்மந்தப்பட்ட செய்திகள் பிரபலமாகும்.
இன்று நீங்கள் 6,14, 9, 15,5, 18 ஆகிய எண்கள் அதிகம் பயன்படுத்துவீர்கள்.
அம்மன், முருகன், பெருமாள் வழிபாடு செய்வீர்கள்.
ஜாதகம் பார்க்க:
ஆதவா ஜோதிட மையம்
9943818081
0 Comments