ராகு கேது பெயர்ச்சி பலன்களில் நல்லவையும் நடக்கின்றன.. கெடுதல்களும் ஏற்படுகின்றன... பொதுவாக குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு-கேதுப் பெயர்ச்சி பலன்கள் என அனைத்தும் ராசிக் கட்டத்தில் சந்திரன் நின்ற வீட்டை வைத்தே கூறப்படுகிறது.. அதில் பெரும்பாலும் பலன்கள் துல்லியமாக இருப்பதில்லை என்றே கூறலாம்... ஆனால் #ராஜநாடி முறைப்படி கூறப்படும் பலன்கள் அனைத்து கிரகங்கள் நின்ற ராசியை வைத்து கூறப்படுவதால் பலன்கள் மிகவும் சரியாக இருக்கும் என்பதில் சந்தேகம் தேவையில்லை..
முதலாவதாக இந்த பெயர்ச்சியால் ஏற்படும் நன்மைகள் அடைய போகும் கிரக அமைப்பையும் பிறகு கவனமாக செயல்பட வேண்டிய கிரக அமைப்பையும் பார்க்கலாம்..
உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் துலாம், மிதுனம், கும்பம் ராசிகளில் இருந்தால் கடந்த ஒன்றரை வருடங்களாக விபத்து,உடல்நிலை பாதிப்பு, அறுவை சிகிச்சை, எதிர்பாராத இழப்பு, சகோதருடன் பிரச்சினை, சொத்து தகராறு, வம்பு சண்டை, போலிஸ், கடன் வாங்கும் நிலை, கடன் கொடுத்தால் திரும்ப கிடைக்காத நிலை, தொழிலில் பார்ட்னர்ஷிப் பிரச்சனை, ஷேர்மார்கெட்டில் முதலீடு செய்து இழப்பு ஆகியவையும் பெண்களுக்கு அவர்களின் கணவரின் உடல்நிலை சரியில்லாமை, கணவருடன் பிரச்சினை பிரிவு ஆகியவை இருந்திருக்கும்.. ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளவர்கள் இனி கவலை கொள்ள தேவையில்லை... வரும் செப்டம்பர் 23 க்கு பிறகு மேற்கண்ட அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் படிப்படியாக மீள்வீர்கள்....
தனுசு, மேசம்,சிம்மம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருப்பவர்கள் சிறிய அளவிலான விபத்து, கடன், அறுவை சிகிச்சை, சகோதருடன் பிரச்சினை, சொத்து தகராறு, வம்பு சண்டை, போலிஸ், கடன் வாங்கும் நிலை, கடன் கொடுத்தால் திரும்ப கிடைக்காத நிலை, தொழிலில் பார்ட்னர்ஷிப் பிரச்சனை, ஷேர்மார்கெட்டில் முதலீடு செய்து இழப்பு என எல்லாவற்றிலும் சிறிய அளவிலான பிரச்சினைகளை சந்தித்திருப்பார்கள்...........ஆனால் மேற்கண்ட ராசிகளில் செவ்வாய் இருப்பவர்களுக்கு போலீஸ், கேஸ் என சட்ட ரீதியான பிரச்சினைகள் அதிகம் வந்திருக்கும்... பெண்களுக்கு கணவருடன் பிரிவு, வெறுத்து ஒதுங்குதல்,பிரச்சினை, சட்ட ரீதியான பிரிவு ஆகியவை ஏற்பட்டிருக்கும்....இவை அனைத்தும் வரும் செப்டம்பர் 23 க்கு பிறகு படிப்படியாக சரியாகும்....
வரும் ராகு கேது பெயர்ச்சிக்கு பின்... ரிஷபம்,கன்னி, மகரம் ஆகிய ராசிகளில் செவ்வாய் உள்ள அன்பர்கள் உங்கள் உடல்நலம், சகோதரர், நண்பர்களுடனான உறவு, பங்கு சந்தையில் முதலீடு, சொத்து பிரச்சினை, கணவரின் உடல்நலம்,கணவருடனான உறவு, வண்டி வாகனங்களில் பயணம், கடன் வாங்கும் சூழ்நிலை,வம்பு சண்டை, தொழிலில் பங்குதாரர் சேர்த்தல்,எலக்ட்ரிக்கல், நெருப்பு, ஆகிய விஷயங்களில் கவனம் தேவை...... விருச்சிகம், கடகம்,மீனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் உள்ளவர்கள் மேற்கண்ட விஷயங்களோடு சட்ட ரீதியானவிஷயங்களிலும் கவனம் தேவை...
adhavajodhidamaiyyam.blogspot.com
ராஜநாடி ஜோதிடன் k.மோகன்
ஆதவா ஜோதிட மையம்
கரந்தை மார்கெட்
கரந்தை
தஞ்சாவூர்-2
9943818081
0 Comments