Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

தம்பதிகளுக்குள் அந்யோன்யம் இருக்க ஜாதக அமைப்பு....

                                               

#திருமணங்கள் தினமும் ஆயிரக்கணக்கில் நடைபெற்றாலும்.... அவற்றில் சிலர் வாழ்க்கை மட்டும் தான் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது போல சிறப்பாகவும்...

தம்பதிகள் தங்களுக்குள் அந்யோன்யமாகவும் இருக்கின்றனர்... என்ன தான் புறத்தோற்றம் பெரியதாக பார்க்கப்பட்டாலும், திருமணத்திற்கு பின்னர் உள்ள வாழ்க்கை புறத்தோற்றம்,அழகு எல்லாவற்றையும் கடந்து புரிதல்,அன்பு இவற்றை நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுகிறது...

ஜாதகப்படி தம்பதிகளுக்குள் அந்யோன்யம் இருப்பதை கண்டு அறிய முடியுமா என்றால்... கண்டிப்பாக முடியும் என்றே சொல்லலாம்...
#ஆண் ஜாதகத்தில் #சுக்கிரன் என்பது மனைவியை குறிக்கிறது... ஆண்கள் தங்கள் பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் இடத்தில் இருந்து 1,,5,9 மற்றும் 3,7.11 ஆகிய இடங்களில் குரு இருந்தால் தங்கள் மனைவியின் மீது அன்பாக இருப்பார்கள்...

பெண்கள் ஜாதகத்தில் #செவ்வாய் என்பது கணவரை குறிப்பதாகும்... பெண்கள் தங்கள் பிறப்பு ஜாதத்தில் செவ்வாய் இருக்கும் இடத்தில் இருந்து 1,5,9 மற்றும் 3,7,11 ஆகிய இடங்களில் சுக்கிரன் இருந்தால் தங்கள் கணவர் மீது அன்பாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை...

Post a Comment

0 Comments