skin diseases |
சூரிய குடும்பத்தில் புதன் முதல் நெப்டியூன் வரை எட்டு கிரகங்கள் இருந்தாலும் நாம் ஜோதிடத்தில் பயன்படுத்துவது புதன் முதல் சனி வரையில் மட்டுமே. அதன் பிறகு உள்ளகிரகங்கள் மனிதன் மீது தாக்கம் ஏற்படுத்தவில்லை என்று அந்த கிரகங்களை கணக்கில் எடுத்து கொள்வதில்லை. நமக்கு மிக அருகில் உள்ள சந்திரனும் மிக தொலைவில் இருந்தாலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சூரியனும் மனித வாழ்வில் தாக்கம் ஏற்படுத்துவதில் முதன்மையாக உள்ளன. இதை தவிர மற்ற கிரகங்களும் அதன் தாக்கத்தை மனிதன் மீது செலுத்துகின்றன என்றே சொல்ல வேண்டும்..
இவ்வாறு
கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு வித குணநலன்களை வழங்குவதன் மூலம் உயர்வையும் தாழ்வையும்
ஏற்படுத்துகின்றன. இந்த கிரகங்களோடு ராகு மற்றும் கேது ஆகிய சூரிய வட்டப் பாதை, சந்திரன்
சுற்று பாதை வெட்டு புள்ளிகளும் மனிதன் மேல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மனித உடலில்
உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு கிரகங்கள் கட்டுபடுத்துகின்றன.
அது போல,மனித உடலில் தோல் பகுதியில் புதன் கிரகம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.. புதன் கிரகமானது ராகு/ கேதுவுடன் இணைவு பெறும்போது தோல் சம்மந்தப்பட்ட அலர்ஜி, அரிப்பு, புண்கள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன..
எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் மிதுனம், துலாம், கும்பம், தனுசு, மேஷம், சிம்மம் ஆகிய வீடுகளில் பிறப்பு ஜாதகத்தில் புதன் இருக்கும் ஜாதகர்கள் கடந்த ஒன்றரை வருடமாக தோல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு இருப்பார்கள்…
உங்கள் ஜாதகப்பலன்களை நேரடியாக அறிய விரும்பினால்.... கீழ்க்கண்ட முகவரியில் அணுகவும்...
தொலைபேசி வாயிலாகவும் பலன் அறியலாம்
0 Comments