ஸ்கூல் ல படிக்கறப்போ படிப்பு சுமார் ரகம் தான்...சேட்டை சூப்பர் ரகம்..... அவனுக்கு செலவு பண்ணி நல்லா படிக்க வைக்க வீட்டில் உள்ளவர்கள் ரெடியாக இருந்தாலும்... இவன் அவர்கள் பேச்சிற்கு பெரிதாக முக்கியத்துவம் தரமாட்டான்... எப்படியோ கஷ்டப்பட்டு எஞ்சினியரிங் படிச்சு முடிச்சுட்டான்...
படிச்சு முடிச்சதும் வேலைக்கு போகச் சொல்லி அவன் பெற்றோர்கள் கட்டாயப் படுத்தினார்கள்... அவர்கள் பேசும் போது அதற்கு வருத்தப்படுவது போல முகபாவனையை மாற்றிக் கொள்வான்... பிறகு வழக்கம் போல அவன் வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவான்... ஒரு நாள் அவன் அம்மா ... தன் கணவனிடம் ... இவனுக்கு எப்படிங்க அரசாங்க வேலை கிடைக்கும்...? இவனே படிக்க மாட்றானு தான் ஹாஸ்டலில் தங்கி வைத்து ஸ்கூலில் இருந்து எல்லா படிப்பையும் முழுவதும் முடிக்க வைச்சோம்...இப்போலாம் அரசாங்க வேலை கிடைப்பதே குதிரை கொம்பா இருக்கு...அவ்ளோ போட்டி .... நம்ம பிள்ளை படிக்க வே மாட்டேன்..அரசு வேலையே வேண்டாம்னு சொல்லி விட்டு ஜாலியா சுத்துறான்... எனக்கு என்னமோ ஜோசியர் சொன்னதுபோல நடக்கும் னு தோனலங்னு சொல்லிவிட்டு வேலையை பார்க்க சென்றுவிட்டாள்....
சில மாதங்கள் ஓடின... ஆசைத்தம்பிக்கு இப்ப ஊருக்குள் நிறைய ஃப்ரண்ஷிப்... பழக்கமான நபர்கள் அதிகம் ஆகிட்டாங்க.... அரசியல் கட்சியில் சின்ன பொறுப்பு கூட கிடைக்கும் னு ஊருக்குள் பேசிக்கிறாங்க... இப்போ ஆசைத் தம்பிக்கும் அரசியல் ல கொஞ்சம் ஆர்வம் வந்துடுச்சு... இப்படி எல்லாம் நல்ல முறையில் போய்கிட்டு இருந்தப்ப தான்... திடீரென ஒரு நாள் மதியம் ஆசைத்தம்பி க்கு ஒரு போன்கால் வருது... அவங்க அப்பாவுக்கு திடீரென ஹார்ட் அட்டாக் வந்து ரொம்ப சீரியஸா இருக்கார்... ஹாஸ்பிடல்க்கு கொண்டு போய்கிட்டு இருக்காங்கனு..... தகவல் கேட்டு பதறிப் போய் பைக் ஐ எடுத்துகிட்டு ஹாஸ்பிடல் நோக்கி போனான்.... அவன் போனதும் அங்கு அவன் அம்மா தலையில் அடித்து கொண்டு அழுவதையும்.... தாயோடு உறவினர்கள் அழுவதை பார்த்ததும் தந்தை அவனை விட்டு பிரிந்துவிட்டார் என்பதை புரிந்து கொண்டான்... சில மாதங்கள் ஓடின... அப்பாவின் பிரிவு அவனுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது... சில மாதங்கள் கழித்து அவனுடைய அப்பா வேலை கருணை அடிப்படையில் கிடைத்தது... பிடிக்காது னு சொன்ன அப்பாவின் வேலையே அவனுக்கு கிடைச்சிடுச்சு...
அரசு வேலை .. அரசியல் மட்டுமில்ல...அப்பா செய்யும் தொழிலை செய்பவர்களுக்கு கூட அவர்கள்
ஜாதகத்தில்
#சனி+சூரியன் இணைவு இருக்கும்ங்க....அதோடு ராகு இணைவும் இருந்ததால் அவனது அப்பா இறந்ததும் அவரது வேலை இவனுக்கு கிடைத்தது.....
1 Comments
Super sir
ReplyDelete