அப்பப்பா.... பொழுது விடிஞ்சா பொழுது போனா..இந்த கடன்காரன்ங்க தொல்லை தாங்கமுடியலயே.. என்ன பண்றதுனே தெரியல.. எப்ப தான் இவனுங்க தொல்லை எனக்கு முடியுமோ..
என்று புலம்பி கொண்டே வந்து வீட்டின் உள்ளே கட்டிலில் அமர்ந்தான் பாண்டியன்..ஏ....லதா... கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டாடி... இவனுங்களுக்கிட்ட பேசி பேசியே எனக்கு தொண்டை தண்ணி வத்தி போச்சு....
கொஞ்சம்.... கொஞ்சம்னு வாங்கி இப்போ எவ்ளோ பெரிய தொகையா வந்து நிக்குது பாருங்க.... எவ்வளவு நாளைக்கு தான் இப்படி நிம்மதி இல்லாம பிழைக்கிறது... உன் அண்ணன் தம்பிகளுக்கிட்ட சமாதானமா பேசி பூர்வீக சொத்தை வித்துப்புட்டு... கொடுத்தவங்களுக்கு நல்ல மனுஷனா எப்போ தான் மாறுவிங்களோ.... போங்க...
அது தான் பிரச்சினை பெருசாகி... பெரிய மனுசன்ங்க பஞ்சாயத்துலலாம் கட்டுப்படாம கோர்ட் வரைக்கும் போய்டுச்சே டி.... இனி அது எப்போ முடியறது... எப்போ நம்ம கடன் எல்லாம் முடிக்கிறதோ...
பாண்டியனுக்கு பூர்விக சொத்து சம்மந்தமாக அவன் அண்ணன் தம்பிகளுக்குள் பிரச்சினை இருந்து வந்தது.... அது அவன் பெற்றோர்கள் இறந்ததும் பெரிதாகிவிட்டது...இவனுக்கும் கடன் தொல்லைகள் இருந்ததால் அதை விற்று வரும் தொகையை எதிர்பார்த்து இருக்கிறான்... விஷயம் கோர்ட்க்கு போய் விட்டதால் இப்போதைக்கு முடியாது... பல வருடங்கள் ஆகும்...
பாண்டியனுக்கு பூர்வீக சொத்தில் சகோதரர்களுடன் பிரச்சினையும் கடனும் இருக்க காரணம்...அவன் ஜாதகத்தில் கேது+புதன்+செவ்வாய் இருப்பது தான் காரணம்.....
இது போல பிறப்பு ஜாதகத்தில் அமைப்பு உள்ளவர்கள் பூர்வீக சொத்து இருந்தால் அதில் பிரச்சினை வராமல் தங்களுக்குள் பேசி தீர்த்து கொள்வது நல்லது... இல்லையென்றால் பஞ்சாயத்து, வழக்கு என்பதை தவிர்க்க முடியாததாகி விடும்....
உங்கள் ஜாதகப்பலன்களை நேரடியாக அறிய விரும்பினால்.... கீழ்க்கண்ட முகவரியில் அணுகவும்...
தொலைபேசி வாயிலாகவும் பலன் அறியலாம்
0 Comments