நீ என்ன சொல்றது நான் என்ன கேக்றது...நான் சொல்றது தான் சரி...நீ சொல்றத எல்லாம் ஏத்துக்க முடியாது... நான் இறங்கி வரமாட்டேன்..வந்தா என் கௌரவம் என்னா ஆகுறது..
. நீ தான் ஒத்து போகணும்...சில நேரங்களில் நான் பண்றது தப்புனு தெரியுது ஆனால் அதை ஏத்துக்க என் ஈகோ என்னை தடுக்குது... எவ்வளவு காசு செலவானாலும் பரவாயில்லை.. அந்த விஷயத்தை உடனே முடிச்சாகணும் ஏன்னா அது என் மான பிரச்சினை... இது போல சொல்றவங்க... நடந்துக்குறவங்க மாதிரி.. டைப்ல... நம்முடைய சொந்தகாரங்க... நண்பர்கள்... குடும்ப உறுப்பினர்கள்... ஏன் நாமே கூட இந்த மாதிரி கேரக்டர் ல இருக்கலாம்... இவங்கள பாம்புனு நினைச்சு தாண்டவும் முடியாது... கயிறுனு நினைச்சு மிதிக்கவும் முடியாது...இது போல பேசுறவங்க பழகுறவங்கள்ட்ட நல்ல ரிலேஷன்ஷிப் மெய்ண்டெய்ன் பண்றது ரொம்ப கஷ்டம்...இவங்கள ஏன்னா... எல்லாமே மத்தவங்க முடிவு எடுப்பாங்க... அதை நாம கேட்டுக்கணுங்றது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்..
இவங்ககிட்ட நல்ல விஷயங்களும் இல்லாமலும் இல்லை... மத்தவங்களுக்கு உதவி செய்றதுல இவங்கள அடிச்சுக்க யாராலும் அடிச்சுக்க முடியாது...தாறுமாறா உதவி செய்வாங்க...
அதே போல் இந்த டைப் ல உள்ளவங்க எதையும் துணிந்து செய்வாங்க.. பின்விளைவுகள் பத்தி யோசிக்க மாட்டாங்க... சண்டை.. வம்பு... வாங்கல் ... கொடுக்கல்... செய்றது பண்றது எல்லாவற்றிலும்... வளைந்து கொடுக்க மாட்டாங்க... அதே போல் சில விஷயங்களில் சமுதாயம் என்ன நினைக்கும்னு கூட நினைக்க மாட்டாங்க...அந்த அளவுக்கு எல்லாவற்றிலும்.. அசாத்தியமான துணிச்சல் உள்ளவங்க... துணிச்சல்க்கும் அசாத்தியமான துணிச்சல்க்கும் வித்தியாசம் உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்....
இது போல கேரக்டர் உள்ளவங்க ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்திலிருந்து ஒன்று ஐந்து ஒன்பதில் இந்த கிரகம் இருக்கும்....
வாழ்க்கையில் ஏறுவதும்.. மாறுவதும்..நமது கேரக்டரால் மட்டுமே...
ஜோதிடத்தை அமானுஷ்யமாக ..மாயாஜாலமாக எண்ணாமல் வாழ்க்கையில் வளர உதவும் வழிகாட்டியாக பாருங்கள்...
உங்களை நெறிப்படுத்துங்கள்... வளருங்கள்...
நேரடி ஜோதிட ஆலோசனை பெற:
ஆதவா ஜோதிட மையம்
ஜோதிடர் K.மோகன்
9943818081
WhatsApp: https://wa.link/t6s87j
0 Comments