தனியார் நிறுவனங்களில்...... இருக்கிற இடம் தெரியாமல் இருந்துவிட்டு வந்துவிட வேண்டும்... நம்ம உண்டு... நம்ம வேலை உண்டு... யார் வம்புதும்புக்கும் போகக்கூடாது...
. யார் என்ன சொன்னாலும் எதையும் எதிர்த்து பேச கூடாது... வீட்டிலிருந்து கிளம்பினால் வேலை... வேலை முடிஞ்சா வீடு... இது போதும் எனக்கு னு இருக்கும் நபர்களை பார்த்திருக்கலாம்... இவர்கள் தலைமை பொறுப்பெடுத்து எதையும் செய்ய துணியமாட்டார்கள்... வேலை செய்யும் இடத்தில் உயர்பதவிக்கு வாய்ப்பு கிடைத்தாலும் வோண்டாமென்று ஒதுக்கி விடுவார்கள்.... காரணம் கேட்டால்.... உயர்பதவி கிடைத்தால்... நமக்கு கீழே உள்ளவங்கள வேலை செய்ய வைக்கணும்... அது ரொம்ப கஷ்டம்... மத்தவங்களங்களோட வம்பு சண்டை வரும்... ஏன் தேவையில்லாமல் இந்த வேலை நமக்கு... போனமா... நமக்கு கொடுத்த வேலையை செஞ்சோமா .... வந்துடுவோம்... இது போதும் நமக்கு னு இருப்பாங்க.... இவர்கள் ஒரு ரகம்...தனியார் வேலைக்கு சேர்ந்தது முதல் எல்லாரிடமும் பேசிக்கொண்டு... பிறரின் வேலையை பகிர்ந்து கொண்டும்..தன் வேலையை தாண்டி அதிகமாக வேலையை தெரிந்து கொண்டும்.. தலைமை பொறுப்புக்கு தயாராகவே இருப்பார்கள் சிலர்... இவர்கள் வாழ்வில் அடுத்தடுத்து புரமோஷன்... இடமாற்றம் என இருந்து கொண்டே இருக்கும்... இவர்கள் மற்றும் ஒரு ரகம்...
ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளவர்கள் தான் இது போன்ற உயர் பதவிகள் அதிகமாக பெறுவார்கள்... கண்டிப்பாக இந்த அமைப்பு அவர்கள் ஜாதகத்தில் இருக்கும்... அவர்கள்... ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து திரிகோணங்களிலும்... சூரியனுக்கு ஏழாம் வீட்டிலிருந்து திரிகோணங்களிலும்..சனி கிரகம் இருக்கும்..
தனியார் வேலையில் உயர்பதவியில் இருப்பவர்கள்...இந்த அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இருக்கிறதா என ஆராய்ந்து பாருங்கள்....
எப்போது உயர் பதவி கிடைக்கும்... என உங்கள் சுய ஜாதகப்படி அறிந்து கொள்ள அணுகவும்...
நேரடி மற்றும் ஆன்லைன் ஜோதிட ஆலோசனைகளுக்கு...
ஆதவா ஜோதிட மையம்
ஜோதிடர் K.மோகன்
கரந்தை.. தஞ்சாவூர்-2
WhatsApp: https://wa.link/t6s87j
0 Comments