Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

சொந்த தொழில் செய்ய ஜாதக அமைப்பு...

       

 

இரவு மணி பதினொன்றை நெருங்கி கொண்டிருந்தது... அன்றைய தினத்திற்கு முந்தைய நாள் தான் அமாவாசை... அதனால் தெரு முழுவதும் நல்ல இருட்டில்.. மூழ்கி இருந்தது... வீட்டில் எல்லோரும் தூங்க சென்று விட்டார்கள். சிவனேஷ் எல்லாருக்கும் முன்பே பாயை விரித்து படுத்தான்... ஆனால் என்னவோ அவனுக்கு தூக்கம் வரவே இல்லை.. மனதில் ஏதோ குழப்பம்.. இது இன்று மட்டும் அல்ல. கடந்த பத்து நாட்களாகவே இப்படி தான் தூக்கம் வராமல் தவிக்கிறான்.. 

ஏன் சிவா தூக்கம் வரலயா... நானும் பார்க்கிறேன் ..நாலைந்து நாட்களாகவே ஒழுங்கா தூங்க மாட்டேங்ற.. என்ன ஆச்சு... வேலைல ஏதும் பிரச்சினையா....னு கேட்டாள் அம்மா தங்கம்..

 அதெல்லாம் ஒன்னும் இல்லை..மா... சும்மா தான்...னு சமாளித்து கொண்டு படுக்க போனான் சிவனேஷ்....

எவ்வளவு நாள் தான் இப்படி மனதில் குழப்பிகிட்டே ஓட்றது... நாளைக்கு ஒரு முடிவு பண்ணிட வேண்டியது தான்... என சற்றே தெளிந்தவனாய் பாயில படுத்து சற்று நேரம் கழித்து உறங்கிப் போனான் சிவா...

காலையில் சீக்கிரம் வேலைக்கு கிளம்பினான்... ஆஃபீசுக்கு போனதும் அட்டன்டென்ஸில் கையெழுத்தை போடும் போதே இது தான் இந்த ஆபிசில் நான் போடும் கடைசி கையெழுத்துனு மனசுக்குள் சொல்லிகிட்டே. கையெழுத்தை போட்டு விட்டு.. வேலை செய்ய போனான்...

மேனேஜர் வருவதை பார்த்து மனதில் சந்தோசம் ஏற்பட்டவனாய் சிறிது நேரம் கழித்து அவரது கேபினுக்குள் நுழைந்தான்.. அவருக்கு விஷ் பண்ணிவிட்டு தான் கொண்டு வந்த லெட்டரை கொடுத்தான்.. கடிதத்தை வாங்கி படித்தவர் முகம் சற்றே வெளிரி போய்.... ஏன்...பா சிவா இந்த முடிவு... நல்லா யோசிச்சு தான் முடிவெடுத்தியானு கேட்டார்...

 ஒரு முறைக்கு நூறு முறை யோசித்து தான் சார் இந்த முடிவு எடுத்தேன்...என்றான் சற்றே பவ்யமாக....

சரி ..இனி..உங்கள் விருப்பம்... எந்த கம்பெனிக்கு போகப் போறீங்க னு கேட்டார்... மேனேஜர்...

இதுவரை பத்து வருடங்களுக்கு மேலாக வேலை செய்துவிட்டேன்.. சார்... போதும் சார்... மத்தவங்ககிட்ட வேலை  செய்தது..
இனி... நானே ராஜா ...நானே மந்திரி னு சொந்தமா தொழில் செய்ய போறேன் னு சொல்லி விட்டு தன் கடைசி பணிநாளை சிறப்பாக முடித்து விட்டு மகிழ்ச்சியாக கிளம்பினான் தன் சொந்த தொழிலை தொடங்க.....

சிவனேஷ் மட்டும் அல்ல... யாராக இருந்தாலும் அவர்கள் ஜாதகத்தில் சனி கிரகம் இருக்கும் அதே கட்டத்திலோ... அல்லது அதற்கு திரிகோணங்களிலோ அல்லது அடுத்த கட்டத்திலோ இந்த கிரகம் இருந்தால் கண்டிப்பாக ... அவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது சொந்த தொழிலை செய்தே தான் தீருவார்கள்...

அவர்கள் தொழிலில் வருமானம் ஈட்டுவார்களா... வெற்றி பெறுவார்களா என்பதை இன்னும் சில கிரகங்கள் இணைவு கொண்டே முடிவு செய்ய முடியும்...

உங்கள் ஜாதகப் பலன் அறிய
தொடர்பு கொள்ளவும்..

ஜோதிடர்K.மோகன்
ஆதவா ஜோதிட மையம்
கரந்தை மார்கெட்
கரந்தை.
தஞ்சாவூர்

WhatsApp:9943818081





Post a Comment

0 Comments