Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

சுகவாசி...ஜாதக அமைப்பு...

#அவனுக்கென்னப்பா சுகவாசி... கேட்டதெல்லாம் கிடைக்கும்... அவங்க அம்மா அப்பா அவன் கேட்டதெல்லாம் வாங்கி தர்றாங்க... அவன் சம்பாதிக்க தேவையே இல்லை... எல்லாம் சேர்த்து வைச்சிருக்காங்க... அவன் பேருக்கு வேலைக்கு போனா போதும்... இருக்கும் சொத்தை அழிக்காம இருந்தால் போதும்... #தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்னு... பேசுறதத கேட்டிருப்போம்....இது போல் இணைவு பெற்ற ஜாதகர் தோற்றம் கவர்ச்சிகரமான தாக இருக்கும்..ஆடை.. ஆபரணம்...சொத்து சேர்க்கை... கிடைக்கும்... இவர்களின் பெற்றோர் செல்வ சேமிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்...இவங்க எதுக்கும் கஷ்டப்பட விரும்பமாட்டாங்க... இவங்களுக்கு எல்லாம் ஈசியாகவும் கிடைக்கும்...பணக்காரர்களின் குழந்தைகள் ஜாதகத்தில் இந்த யோகம்(இணைவு) இருக்கும்..செல்லமாக வளர்க்கப்படும்  பிள்ளைகளின் ஜாதகத்திலும் இந்த யோகம் இருக்கும்...

   இது போல வாழ்க்கை யாருக்கெல்லாம் அமைகிறது என ஜோதிட ரீதியாக பார்த்தோமேயானால்... ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்திலிருந்து ஒன்று.. ஐந்து.. ஒன்பதாம் இடங்களில் சுக்கிரன் இருந்தால் சிறப்பாகவும்... மூன்று..ஏழு.. பதினொன்றாம் இடங்களில் சுக்கிரன் இருந்தாலும்   இது போல் வாழ்க்கை அமையும்ங்க..... ராகு கேது இணைவு இல்லாமல் இருந்தால் இந்த பலன் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை... வக்கிரம்.. பரிவர்த்தனையும்... கணக்கில் கொள்ள வேண்டும்....

Post a Comment

0 Comments