Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

பார்த்தால் பசு....பாய்ந்தால்.....???

                                                



 சூரி.... ரொம்ப அமைதியான பையன். யாரிடமும் அதிகமாக பேச மாட்டான். அவன் உண்டு அவன் வேலை உண்டு என இருப்பான்.அவன் வயசு பசங்களெல்லாம் எல்லாம் ஒன்னு சேர்ந்து விளையாடி கொண்டிருக்கும் போது... இவன் மட்டும் தனியாக இருப்பான்... யாரிடமும் அதிகமாக பேசி விளையாடுவதில்லை என்பதால்..

இவன் ஒரு பயந்தாங்கொளி...என்று பசங்க இவனை அவ்வப்போது கிண்டல் செய்வார்கள்...இவனும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் போய்விடுவான்...

ஒரு நாள் காலையில் இவன் தூங்கிகொண்டிருக்கும் போது...திடீரென அவன் அம்மா செல்லத்தாயின் அலறல் சத்தம் கேட்டது.. திடுக்கிட்டு எழுந்தவன் அம்மா.... என கத்திக் கொண்டே ஒடினான்.... அவனது அம்மாவின் மண்டையில் இருந்து ரத்தம் ஒழுகியதை பார்த்தது தான் தாமதம்... கையில் கிடைத்த கல்லை எடுத்து அங்கே சண்டை போட்டுக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரனை நோக்கி வீசினான்... அது அவனது கண்ணை பதம் பார்த்தது... அவன் வலியால் அலறியதை கூட கண்டுக்காம மீண்டும் ஒரு கல்லை எடுத்து வேகமாக வீசினான் சூரி..... இவன் பயந்தாங்கொளி சொல்லிக்கொண்டிருந்த பசங்களெல்லாம் இப்போ... கிடு கிடுத்து தான் போயிருந்தாங்க.....

சாது மிரண்டா.. காடு கொள்ளாது... பார்த்தால் பசு.. பாய்ந்தால் புலிங்ற பழமொழி எல்லாம் சூரி.. போல உள்ளவங்களுக்காகவே எழுதிய பழமொழி இல்லையாங்க.....😄😄😭

இது போல உள்ளவங்க ஜாதகத்தில் #குரு+#கேது+#செவ்வாய் இணைவு இருக்கும்ங்க... இவங்க பின்விளைவை பற்றி யோசிக்காமல் செயல்படுவாங்க... இது போல உள்ளவங்களுக்காக தான் கட்டப்பட்டதுங்க... சீர்திருத்தப்பள்ளி....


ஆதவா ஜோதிட மையம்
கரந்தை மார்கெட்,
கரந்தை.
தஞ்சாவூர்.-2

9943818081

Post a Comment

0 Comments