Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

சண்டக்கோழியா.... உங்கள் துணைவி??

                                     

 ஓடும் பேருந்தில் உட்கார சீட் கிடைக்காததால் .... மேலுள்ள கம்பியில் தொங்கும் கைப்பிடியை பிடித்து நின்று கொண்டு பயணத்தை ஆரம்பித்து பத்து நிமிடங்களை கடந்தது

.... லேசாக தூக்கம் வந்தது...


 டிக்கெட்.. சார்.. டிக்கெட்... டிக்கெட் எடுக்காதவங்க ..எடுத்துடுங்க... அடுத்த ஸ்டாப் ல செக்கர்... ஏறுவாறுனு... சொல்லிகிட்டே.. கண்டக்டர் தன் அருகில் வந்ததும்... சற்றே சுதாரித்து கொண்டு... பாக்கெட்டில் இருந்த இருபது ரூபாயை நீட்டி... அண்ணா நகர் ஒன்னு சார்..னு சொல்லி டிக்கெட்டை எடுத்து கொண்டு மீதி சில்லறையை பாக்கெட்டில் தள்ளிவிட்டு மீண்டும் தூக்கத்தை தொடர்ந்தான் மாதவன்....


   என் பொண்ணு பாவங்க... கல்யாணம் பண்ணின நாளிலிருந்து ரொம்ப கஷ்டப்படுறா....சொந்தகாரப்பய.... நல்லவனு நினைச்சு கல்யாணம் பண்ணி வச்சோம் அந்த குடிகார பயலுக்கு...கல்யாணம் பண்ணின நாளிலிருந்து இப்ப வரைக்கும் அதே மாதிரி தான் இருக்கான்...குடிச்சுபுட்டு என் பொண்ணையும் பேரப் புள்ளங்களையும் அடிச்சு டார்ச்சர் பண்றான்....பத்து வருஷமாச்சு ஒன்னும் மாறல...என் பொண்ணும் அந்த சகதியிலேயே வாழுது....என்று கவலையோடு ஒரு பெரியவர் மற்றொரு பெரியவரிடம் புலம்பிகிட்டிருப்பதை காது கொடுத்து கேட்டான் மாதவன்.... சிறிது தூக்கம் கலைந்தது...


 அண்ணாநகர் இறங்குறங்குவங்களாம் படிகட்டுக்கு போங்க....னு சொல்லிகிட்டே ஸ்டாப்க்கு 500 மீட்டர்க்கு முன்னாடியே விசில் அடித்தார் கண்டக்டர்.... 


   ஏதோ யோசித்தவனாய் பஸ் நின்றதும் இறங்கி டூவீலர் ஸ்டாண்டை நோக்கி நடந்தான்... மாதவன்.... பத்து வருஷமா ஒருத்தன் தண்ணிய போட்டுட்டு அடிச்சு கொடுமைப்படுத்தியும் அந்த பொண்ணு வாழுது.... நம்ம வீட்டில்  லேசா சத்தம் போட்டாலே உடனே சண்டை போட ஆரம்பிச்சுடுறாளே என் பொண்டாட்டி... #குணவதி.... அந்த பெயர கேட்டு தான் முடிவெடுத்தேன் அவள கல்யாணம் பண்ண... எல்லாம் விதி..னு நொந்துகிட்டான்...


  சண்டை போட ஆரம்பிச்சுட்டா... உடனே முடியவும் முடியாது... ஒரு வாரம் வரைக்கும் நீளுதே.... என்ன செட்டிங் னே தெரியலப்பானு புலம்பிக்கிட்டே வண்டியை எடுத்தான்....


 மாதவனின் புலம்பலுக்கு காரணம் அவன் ஜாதகத்தில் உள்ள செட்டிங் தாங்க.... சுக்கிரன்+செவ்வாய்+ராகு இணைவு தாங்க... அவன் புலம்பலும் மாறும்... பழகப் பழக பாலும் புளிக்கும் போது.....

Post a Comment

0 Comments