நீங்கள் சாதனையாளரா....?? சாதனையாளர் ஆக விரும்புகிறீர்களா??
அப்போ.... உங்கள் ஜாதகத்தில் சனியும் குருவும் ஒன்றுக்கொன்று திரிகோண வீடுகளில்(1,5,9)...இணைவு பெற்று இருக்கும்..... இந்த இணைவு குரு சண்டாள யோகம்... பிரம்மஹத்தி தோஷம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும்.பயமுறுத்தப்பட்டாலும்....மிகச் சிறந்த யோகமே ஆகும்... (யோகம் என்பது இரண்டு கிரகங்களின் இணைவு என்பது நம் அனைவருக்கும் தெரியும்...)
இந்த இணைவு இருந்தால்...ஜாதகர்.. தான் செய்யும் எந்த செயலையும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு செய்து முடிப்பார்..செயலின் போது எந்த சூழ்நிலையையும் தனக்கு ஏற்றாற்போல மாற்றி கொண்டு...தான் மேற்கொண்ட செயலை தொடர்ந்து செய்வார்...#கர்மமே (செயலே) கண்ணாக செயல்படுவார்..தர்ம காரியங்களில் ஈடுபாடு கொண்டவர்.. #தொழில் ஆர்வம் என்பது அதிகமாக இருக்கும்...தன் செயலில் கண்ணியமாக இருக்க விரும்புவார்..பொறுமையா செயல்பட்டாலும் சரியாக செயல்படுவார்...அவரது செயல்பாடுகள் அவருக்கு கௌரவத்தை சேர்க்கும்...சாதனையாளராக இருப்பவர்கள் ஜாதகத்தில் இந்த இணைவு நிச்சயமாக இருக்கும்.....
மற்ற கிரகங்கள் இணைவு கொண்டு... இவர் வாழ்க்கையில் வெற்றியின் உயரம் எவ்வளவு என்பது நிர்ணயிக்கப்படும்... ஆனால் சாதனையாளராக இந்த இணைவு வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.... #பெரும்பாலான சாதனையாளர்கள் வாழ்க்கையை பார்த்தீர்கள் என்றால் வறுமை...பசி.. பிரச்சினை...பட்டினி... இளமையிலேயே வேலைக்கு செல்லும் நிலை... தந்தை ஆதரவின்மை... என ஒரே மாதிரியான காரணிகளாகத்தான் இருக்கும்...அது போல அவர்கள் ஜாதகத்தில் இந்த இணைவும் பொதுவாக இருக்கும்...இவ்வளவு இடர்பாடுகளை எதிர்கொண்டு வாழ்வதே பெரிய விஷயமாக இருக்கும் போது...தடைக்கற்களை படிக்கற்களாக்கி ....அந்த காரணங்களை எல்லாம் தோரணங்களாக தொங்கவிட்டு...அதில் சாதனையாளராக வருவது என்ன சாதாரண காரியமா....?நீங்களே ஆய்வு செய்து பாருங்கள்... இந்த இணைவு எத்தனை சாதனையாளர் ஜாதகத்தில் இருக்கிறது என்று... பிறப்பு குறிப்புகள் சரியானதாக இருப்பது அவசியம்...
#Rajanadi
0 Comments