Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

நீங்கள் குக்....ஆ... இல்லை ரெஸ்டாரன்ட் ஓனரா???

                                 
டேய் பாண்டிதுரை...நில்லுடா....னு எதிரே புல்லட்டில் வந்தவர் சத்தம் போட்டதும்..யாருடா நம்மள முழுப் பேர் சொல்லி கூப்புடுறதுனு நின்று திரும்பிப் பார்த்தான் பாண்டி... அவன ஊருக்குள்ள எல்லோரும் பாண்டி னு தான் ...கூப்பிடுவாங்க.. முழுப் பெயர் சொல்லி கூப்பிடுவது இல்லை ...கூப்பிட்டவர் புல்லட்டை திருப்பி கொண்டு நெருங்கி வந்ததுக்கப்பறம் பாண்டி முகத்துல சந்தோஷம் திடீரென தொற்றிக் கொண்டது..மாப்ள..... ஆதி....நல்லாருக்கியாடா... எங்கடா இருக்க?? என்ன பண்ற.. உன்னை பார்த்து எவ்ளோ வருஷமாச்சுடா..னு  படபடவென வெடித்தான் பாண்டி....

இவ்வளவு நாள் ஃபாரின்ல இருந்தேன் டா மாப்ள... இப்போ நம்ம டவுன்ல ஒரு ரெஸ்டாரன்ட் ஓப்பன் பண்ணலாம் னு இருக்கேன்.. அதுக்கு வேலை நடந்துகிட்டிருக்கு... நல்ல குக்... ஒருத்தர் வேணும்...ஆள் தேடுறேன்... நல்ல ஆளா கிடைக்க மாட்றாங்க.. என்ன பண்றதுனு புரியலடா னு சொன்னவன் திடீரென ஏதோ புரிந்தவனாய்...... ஆமாம்..,. உனக்கு கூட சின்ன வயசிலேயே. சமையலில் ஆர்வம் இருக்கும்ல... என்ன பண்ற மாப்ள...நீ....??னு கேட்டான்.

நல்லா கேட்ட போடா மாப்ள... நானே குக் தான் டா ...எல்லா வெரைட்டியும் பண்ணுவேன் டா..... ஆனால்... ஒரு ஹோட்டலில் 10 வருஷமா வேலை செய்றேன் டா...எப்படி திடீரென வெளியே வர்றது....னு சொன்னான் பாண்டி... நீ தான் மாப்ள ஏதாவது பண்ணணும்.. ப்ளீஸ்டா..னு கெஞ்சினான் ஆதி... நான் வேணும்னா ஒன்று செய்றேன்...நம்ம ஃபிரண்ட் ஒருத்தர் என்னைப் போலவே நல்லா எல்லா வெரைட்டியும் செய்வாரு‌‌..அவர வரச் சொல்லட்டா... அவரும் இப்போ வேலை இல்லாமல் தான் இருக்காரு.....

 கண்டிப்பாக வரச் சொல்லு மாப்ள... இது தான் என் விசிட்டிங் கார்டு... ரொம்ப தேங்க்ஸ் மாப்ள... குக்... கிடைக்கலையேனு கவலையா இருந்துச்சு... இப்ப சந்தோஷமா இருக்கு மாப்ள... சரி வரேன் டா... மாப்ள..வேலை நடந்துகிட்டிருக்கு... போய் பார்க்கணும்... நீயும் ஃப்ரீயா இருந்தா அந்த பக்கம்...வா... பை டா மாப்ள....னு  கிளம்பி விட்டான் ஆதி.....

பாண்டித்துரை எத்தனை வருடம் ஆனாலும்.... குக் ஆக தான் இருப்பான்... ஏனென்றால் அவன் ஜாதகத்தில் சனி+செவ்வாய் இணைவு உள்ளது... ஆதியின் ஜாதகத்தில் சனி+சந்திரன் இணைவு இருந்ததால் அவன் ரெஸ்டாரன்ட் ஓபன் செய்ய தயாராகிவிட்டான்...

Post a Comment

0 Comments