உங்கள் வீட்டில் அம்மா உங்கள் நண்பரா???
அல்லது அப்பா உங்கள் நண்பரா??
இயற்கையாகவே அப்பாக்களுக்கு மகளை தான் பிடிக்கும்...
அம்மாக்களுக்கு மகனை தான் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது...அது உண்மையும் கூட...எதிர்பாலினத்தை அவரவர்கள் ஆதரிப்பது ஒரு காரணமாக சொன்னாலும்.... அப்பாவுக்கு மகனை அதிகம் பிடிக்காதத்திற்கு.. ஆண் குழந்தைக்கு கொஞ்சம் முரட்டுத்தனம்.. உடல் வலிமை அதிகமாக இருக்கும்.. வாலிப வயதை கடந்ததும் அப்பாவை மீறி செயல்படக்கூடிய வலிமை உள்ளவர்கள்...அதை அப்பாக்களால் ஏற்க முடியாது..தங்களது கட்டுப்பாட்டில் மகனை வைத்து கொள்ள முடியவில்லையே என்ற இயலாமையும் ஒரு காரணம்...அதே நேரத்தில் மகளை தன் கட்டுப்பாட்டில் எளிதாக வைத்து கொள்ள முடியும்....அதே போல்... பெண் குழந்தைகளை அம்மாக்கள் அதிகம் விரும்பாததற்கு.... அம்மாக்கள் வாங்கும் ஆடை... அணிகலன்கள்... செய்து கொள்ளும் மேக்கப்...என் எல்லாவற்றிலும் பெண் குழந்தைகள் போட்டி போடுவார்கள்... எனக்கு மாமியார் போல இருக்கிறா என் பொண்ணு னு எத்தனையோ அம்மாக்கள் புலம்புவதை கண்கூடாக நாம் பார்க்கலாம்...அதே நேரத்தில் ஆண் குழந்தைகளை தங்கள் பேச்சிலேயே கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள முடியும்...
ஆனால்...இப்படியில்லாமல் பல வீடுகளில் அம்மாவுக்கு... பெண் குழந்தை நண்பராக இருப்பதையும் பார்க்கலாம்.... அப்பாவுக்கு ஆண் குழந்தை நண்பர் போல இருப்பதையும் பார்க்கலாம்...இது போல் இருப்பதற்கு ஜோதிட ரீதியாக என்ன கிரக இணைவு என்று பார்த்தோமேயானால்... #குருவிற்கு சூரியனுடன் இணைவு இருந்தால்... ஜாதகர் அப்பாவுடன் நண்பர் போலவும்... சந்திரனுடன் இணைவு இருந்தால் அம்மாவுடன் நண்பர் போலவும் இருப்பார்...
0 Comments