நாம் ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களால் தினமும் வாகனங்களில் பயணம் செய்கிறோம்.. பயணங்களில் பல்வேறு நல்ல.... அல்லது... கெட்ட அனுபவங்கள் நாம் விரும்பினாலும்... விரும்பாவிட்டாலும் கிடைத்தே தீரும்... பெரும்பாலும்..நம் எதிர்பார்ப்பை மாற்றி புதிய அனுபவங்கள் கிடைப்பது இதில் நடக்கும்...வாகனங்களில் பயணம் செய்தால் மட்டுமில்லை..வாழ்க்கையில் பயணம் செய்பவர்களுக்கும் இயற்கை அதையே தான் வழங்குகிறது... சில நேரங்களில் நாம் தொடர்ந்து பயணம் செய்யும் பாதைகள் அடைக்கப்பட்டிருக்கும் அனுபவம் நம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்... அந்த பாதை அடைப்பால் பல மாற்றங்கள் நிகழும்..அப்பாதையில் இருபுறமும் உள்ள கடைகள் மூடப்படும்... அவர்கள் வியாபாரம் பாதிக்கப்படும்... அவர்களின் வாழ்க்கை நிலையில் மாற்றம் ஏற்படும்... அதே நேரத்தில் புதியதாக உருவாகி உள்ள பாதையில் புதிய கடைகள்..புது நபர்கள்... அவர்கள் வாழ்வில் புதிய முயற்சிகள் ஏற்படும்....இது நிகழ்வதை தவிர்க்க இயலாது...
உங்கள் ஜாதகத்தில் குரு வக்கிரம் அடைந்திருந்தால் உங்கள் வாழ்க்கைப்பாதையில் டைவர்ஷன் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை உண்டு... அதனால் உங்கள் நடத்தைகளில்(characters) புதிய மாற்றம் ஏற்படும்... அப்போது உங்களில் இன்னொருவர் இருந்ததை உணர்வீர்கள்.... அதனால் அதிகமாக புதிய அனுபவங்கள் ஏற்பட்டு வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்படும்... போதை பழக்கங்களை விட்டு விலகி இருத்தல் நலம்..... இல்லை என்றால் அதற்கு அடிமையாகிவிட வாய்ப்பு உண்டு.... ஆகையால் வாழ்க்கையில் சிந்தித்து செயல்படுங்கள்.....
0 Comments