#எல்லாருக்கும்இரண்டுவருமானம் வரணும் இரண்டு தொழில் செய்யணும்னு ஆசை இருந்தாலும் வாழ்க்கைல ஒரு சில பேருக்கு தான் இரண்டு வகையான வருமானம் தொழில் அமைகிறது.... பெரும்பாலும் இது போல உள்ளவர்களுக்கு 27 வயது வரைக்கும் ஒரு தொழிலும் அதற்குப் பிறகு27- 35 வயது வரை மற்றொரு தொழிலும் அமைகிறது... பிறகு இரண்டு தொழிலையும் கொண்டு ஜாதகர் இரண்டு வருமானம் பெறுவார்.....
சிம்பிளா உங்களுக்கு புரியிற மாதிரி சொல்லணும்னா ரஜினி நடித்த...பாட்ஷா படம் பெரும்பாலும் எல்லாரும் பார்த்த படம்... அந்த படத்துல ரஜினி மும்பையில் #பாட்ஷா என்ற தாதாவாக இருப்பார் அவரது வாழ்க்கையில் ஏற்படுகின்ற ஒரு மாற்றம் திடீரென தமிழ்நாட்டுல ஆட்டோ ஓட்டும் #மாணிக்கம் ஆக மாற்றும்..... இதுபோல மாற்றம் உங்கள் வாழ்க்கையிலயும் #நீங்கள்விரும்பாவிட்டாலும்ஏற்பட்டதா??? அப்படி என்றால் கண்டிப்பாக உங்களது ஜாதகத்தில் #சனி வக்ரமாக இருக்கும்...
உங்கள் ஜாதகத்தில் சனி வக்ரமாக இருக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது என்றால் உங்களது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து சனி 5 6 7 8 9 ஆம் இடங்களில் இருந்தால் பெரும்பாலும் சனி வக்கிரம் என கொள்ளலாம்....
0 Comments