இப்படியெல்லாம் நீங்கள் பேசுபவரா?? வீட்டில் வசதி இருந்தாலும்... சொகுசாக இருப்பதில் பணம் செலவழிப்பதில் பெரிதாக மனம் ஒட்டவில்லையா?? உங்கள் கணவன்/மனைவி வற்புறுத்தினால் மட்டுமே சண்டை போட்டு...பிறகு உங்களை அழகுபடுத்திக் கொள்கிறீர்களா??? உங்கள் மனம் எப்போதும் தனிமையை தேடுகிறதா?? கூட்டத்தில் இருந்தாலும் தனிமையாக உணர்கிறீர்களா??? கடவுள்... பக்தி.. பிறருக்கு உதவி செய்தல் என மனம் எப்போதும் விரக்தியாகவும்... பற்றற்று இருக்கிறதா???
ஓலைக் குடிசையில் இருந்தாலும் போதும் ஓஹோவென பங்களா தேவையில்லை என்று நினைக்கிறீர்களா... மனநிம்மதி ஒன்றே போதும்.... போதுமென்ற மனமே பொன் செய் மருந்து என்று நம்புகிறீர்களா....?
அப்படி என்றால் உங்கள் ஜாதகத்தில் சந்திரன்+சுக்கிரன்+கேது ஒன்றுக்கு ஒன்று திரிகோணம் மற்றும் ஏழாம் வீட்டிலோ...அல்லது ஒரு கிரகத்தின் மூன்றாவது வீட்டில் இருந்து திரிகோணம் மற்றும் ஏழாம் வீட்டிலோ இணைவு இருக்கும்... இந்த இணைவு இருந்தாலும் மேற்கூறிய பலன்கள் இல்லை என்றால் பிற கிரகங்கள்... இணைவு இருக்கும்...
1 Comments
Ok
ReplyDelete