"டேய் சந்துரு நல்லா படிடா....இல்லைனா அப்பா மாதிரி தான் டா சம்பாதிக்க கஷ்டப்படணும்....".என்று வழக்கம் போல சொன்னாள் அம்மா செல்வி... "ஏம்மா இப்படி சொன்னதையே..... சொல்லுறீங்க எப்ப பார்த்தாலும்.... நானும் படிச்சுதாம்மா பாக்றேன்...மண்டைல ஏறவே மாட்டேங்குது...எனக்கும் கஷ்டமா இருக்கு மா.... எப்படி தான் படிக்கறதுனே தெரியுமா...."னு கவலை தோய்ந்த குரலில் சொன்னான் சந்துரு... சின்ன பிள்ளையிலிருந்தே கருத்தா பேசுவான் சந்துரு... அவன் பேச்சில் ஆழ்ந்த கருத்து இருக்கும்... சுருக்கமாக பேசினாலும் பளிச்சுன்னு மத்தவங்களுக்கு புரியறாப்ள பேசுவான்... ஆனால் படிப்பு மாத்திரம் அவனுக்கு பாகற்காய் போலத்தான் கசந்தது... கஷ்டப்பட்டு படிப்பான்...படித்ததை கேட்டால்... மறந்து விட்டது என்பான்.... படிப்பில் பல்லி யாக இருந்தாலும் பேச்சில் கில்லி தான் தம்பி..என்று எல்லாரும் சொல்வார்கள்... இருந்தாலும் படிக்க கஷ்டப்படுகிறான்...அவனும் என்ன தான் செய்வான் பாவம்... அவன் ஜாதகத்தில் சந்திரன்+புதன்+கேது இணைவு இருக்கிறது... படிப்பில் சறுக்கினாலும் பேச்சில் வென்று விடுவான் சந்துரு...பள்ளிப்படிப்பு வரை படிப்பதற்கு ஊக்கம் கொடுத்தால் போதும்... மேற்படிப்பில் நன்றாக படிப்பான் சந்துரு....
புதன்+கேது இணைவு உள்ளவர்கள் பள்ளிப் படிப்பில் சுமாராக இருந்தாலும் கஷ்டப்பட்டு பள்ளிப் படிப்பில் தேறினால் போதும்... மேற்படிப்பில் பல டிகிரி வாங்கலாம் இவர்கள்....
வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும் போது... அதில் வாய்ப்பை பார்ப்பவர்கள் ஜெயிக்கிறார்கள்......அதை பிரச்சினையாக மட்டும் பார்ப்பவர்கள் தோற்கிறார்கள்..
0 Comments