ராஜா எப்போதும் போல காலையில் எழுந்து டீக்கடைக்கு சென்று டீ குடித்து கொண்டே அங்கு உள்ளவர்களிடம் பேசிக்கிட்டேஅன்றைய நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தான். செய்திகள் படிப்பதை விட வேலைவாய்ப்பு...
விளம்பரங்கள் வந்திருக்கிறதா என வேகமாக பார்த்தான்.. ஒன்றிரண்டு விளம்பரங்கள் வந்ததை பார்த்து அதை செல்போனில் போட்டோ எடுத்து கொண்டு செய்தித்தாளை சிறிது நேரம் படித்து விட்டு வீட்டிற்கு கிளம்பினான்...
ராஜா வேலையை விட்டு கொஞ்ச நாள் ஆச்சு.. அவனுக்கு மீண்டும் வேலை கிடைப்பது கஷ்டம் ஆக இருக்கிறது... ராஜாவுக்கு வேலை நிரந்தரமாக கிடைக்கவில்லை.... எந்த வேலை கிடைத்தாலும் அதில் அவனும் நிலைப்பதில்லை...பத்து வருடத்தில் 18 கம்பெனிக்கு மாறிவிட்டான்....அவனுக்கு எதிரியே அவன் தான்...வேலையில் அவன் பெயருக்கு ஏற்றார் போல் ராஜாவாக இருக்க விரும்புவான்..கம்பெனியில் மற்றவர்களுக்கு பிரச்சினை என்றால் முதல் ஆளாக நின்று அவர்களுக்கு ஆதரவாக பேசி நிர்வாகத்திடம் கெட்ட பெயர் சம்பாதிப்பது தான்....
ஆனாலும் தொழிலாளர்களிடம் அவனுக்கு நல்ல பெயர் உண்டு....பொதுநலத்துடன் அவன் செயல்படுவது தான் அவன் வேலைமாற்றத்திற்கு காரணம்.....ஆனாலும் அவன் பல தடைகள் கடந்து...அவனுடைய பொதுநலத்தால் ..... எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வருவான்.. ஏனென்றால் அவன் ஜாதகத்தில் #சனி+கேது இணைவு உள்ளது...
0 Comments