உங்கள் ஜாதகத்தில்……
ரிஷபம், மகரம், கன்னி, ஆகிய இடங்களில் சுக்கிரன் இருந்தால் வரும் அக்டோபர் மாதம் 2020 முதல் பணவரவு உண்டு. அதில் சிலருக்கு இன்சூரன்ஸ் மெச்சூரிட்டி ஆகி பணவரவு பெரிய தொகையாக....
கிடைக்கலாம்..ஆர்.டி.. ஃபிக்சடு டெப்பாசிட் மெச்சூரிட்டி ஆகி பணவரவு கிடைக்கும் வாய்ப்பு உண்டு... சொத்து விற்று அதன் மூலம் பணவரவு அல்லது கடன் தொகையாக லோன் கிடைக்கும் என எதிர்பார்த்தால் கிடைக்கும். ஆகவே பணவரவு பெரிதாக கிடைக்கும் வாய்ப்பு உண்டு…..பணவரவு எதிர்பார்த்தது போல கிடைத்தாலும் இந்த அமைப்பு உள்ள ஆண்கள் மனைவியுடன் ஒத்து போவதில் சிக்கல் உண்டு. சூழ்நிலைக்கேற்றார் போல அனுசரித்து செல்வதன் மூலம் சிக்கலை தவிர்க்கலாம்…மீனம்,விருச்சிகம்
ஆகிய இடங்களில் சுக்கிரன் இருந்தாலும் பணவரவு
உண்டு. ஆனால் ஓரளவுக்கு மட்டுமே கிடைக்கும். இது முன்னர் இருந்த நிலையை விட
மேலானதாக இருக்கும்…. கடகத்தில் இருந்தால் பணவரவில் மற்ற இரு இடங்ளை விட சற்று மேன்மை
உண்டு… இந்த அமைப்பு பிறப்பு ஜாதகத்தில் உள்ள ஆண்கள் மனைவியுடனான உறவில் விரக்தி,தற்காலிக
பிரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சூழ்நிலையை புரிந்து முன்னெச்சரிக்கையாக கையாள்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து
விடுபடலாம்.
இது போன்ற
அமைப்புகளை பார்க்கும்போது வக்ரம், பரிவர்த்தனைகளை கவனத்தில் கொள்வதன் மூலம் சரியான
பலன்களை உணரலாம்.
0 Comments