Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

லோன் வாங்க வைக்கும் ஜாதக அமைப்பு...


கடன் என்பது பலர் வாழ்க்கையில் அவசியமான ஒன்று...சிலர் வாழ்க்கைக்கு தேவைப்படாத .. வெறுக்கும் ஒன்று... கடன் வாங்கி பழக்கப்பட்டவர்களுக்கு அது ஒரு போதை... எந்த பேங்கில் எவ்வளவு வட்டியில் கடன் கிடைக்கும்??? ..
எந்த....
பேங்க் சிறந்தது??  எவ்வளவு ப்ராசஸிங் ஃபீ?? டாப் அப் லோன் எப்படி வாங்கலாம்?? சிபில் ஸ்கோர் எவ்வளவு இருந்தால் எவ்வளவு கடன் கிடைக்கும்?? என கடன் பற்றி டீடெயில் ஸ்டடியே பண்ணி இருப்பாங்க...லோன் கிடைக்கிறது என்பதற்காக திரும்ப திரும்ப லோன் வாங்கி வசதிகளை வரவுக்கு மீறி பெருக்கி கொண்டு... எலிப்பொறியில் மாட்டிக் கொண்டது போல ...அவங்க வாழ்வில் கடனால் பிரச்சினைகள் அதிகம் இருக்கும்..... அப்புறம் #கடன்நிவர்த்தி ஆக கடன் நிவர்த்தி ஸ்தலங்கள்... பரிகாரங்கள்.. ஹோமங்கள்...என மீண்டும் கடனை ஏற்படுத்தி கொள்வார்கள்...
    சிலருக்கு கடன் வாங்குவதே பிடிக்காது... தேவைக்கு கடன் வாங்கினாலும் அதை உடனே வாயை கட்டி வயிற்றை கட்டியாவது கொடுத்து விட்டு தான் அமைதியாவார்கள்... பசிக்கு உணவு கூட இல்லாமல் இருப்பார்கள்...ஆனால் கடன் மட்டும் வேண்டாம் என்பார்கள்....
 
  ஜாதக ரீதியாக #செவ்வாய்+ராகு இணைவு உள்ளவர்களுக்கு முன்னதாக சொன்னதும்... #செவ்வாய் ராகு/கேது இணைவு இல்லாமல் இருந்தால் பின்னதும் பலனாகும்... நீங்கள் எப்படி என்று நீங்கள் கூற வேண்டியது இல்லை... உங்கள் ஜாதகமே..கூறும்..
  கடன் வாங்குவது தவறில்லை... அத்தியாவசிய...அவசர... கட்டாயம் கடன் வாங்கியே ஆக வேண்டும் என்ற தேவைகளுக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும்... அதை உரிய காலத்தில் அடைத்து விட்டு.. வரவுக்கு ஏற்ப செலவுகள் செய்ய பழக வேண்டும்.... கிரகங்கள் நம்மை தூண்டினாலும்.. காலத்திற்கு ஏற்ப மதியை  சமயோசிதமாக செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது உறுதி.... நண்பர்களே...

நண்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை இங்கு பதிவிடலாம்


Post a Comment

0 Comments