காதல் என்பது வாலிப வயதில் அனைவரையும் பற்றிக் கொள்ளக்கூடிய எல்லாருக்கும் பிடித்தமான தொற்றுநோய். காதலில் எல்லாரும் ஜெயிப்பதில்லை. எல்லாரும் தோற்பதும் இல்லை. சிலருக்கு..... ஒன்றுக்கு ஒன்பதாக அமைகிறது, பலருக்கு எட்டாக்கனியாக இருந்து விடுகிறது. பெரும்பாலும் எல்லாருக்கும் காதல் அனுபவம் வாழ்க்கையில் இருக்கும்.
ஜாதக ரீதியாக காதலுக்கு..... சுக்கிரன்+புதன்+குரு.... இணைவு இருந்தால் கண்டிப்பாக அது வெற்றி பெறும்.இதில் சுக்கிரன் கிரகம் எதிர்பாலின ஈர்ப்பையும் புதன் பேச்சு சம்மந்தப்பட்ட கிரகம் ஆதலால் காதலை தடையின்றியும் வெளிப்படுத்தும்.இதில் உள்ள கிரகங்கள் ராகு/கேதுவால் பாதிக்கப்படும் போது காதல் தோல்வியுறுகிறது. புதன் பாதிக்கப்பட்டால் காதலை வெளிப்படுத்துவதில் சிக்கல் இருக்கும். சுக்கிரன் பாதிக்கப்பட்டால் அதிகமான எதிர்பாலின ஈர்ப்பு அல்லது எதிர்பாலின ஈர்ப்பின்மையை ஏற்படுத்தும்.
இப்போது இந்த இணைவு உங்கள் ஜாதகத்தில் இருக்கிறதா என எப்படி அறியலாம் என்பதை இப்போது பார்க்கலாம் நண்பர்களே... உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் இடத்தை ஒன்று என எடுத்துக்கொள்ளுங்கள் அதில் இருந்து புதன் மற்றும் குரு கிரகம்.. ஒன்று,ஐந்து,ஒன்பது,மூன்று,ஏழு,பதினொன்று ஆகிய இடங்களில் இருந்தால் கிரகங்களுக்கு இணைவு உள்ளது, உங்களுக்கு காதல் இருக்கும். இதற்கு ராகு/கேது இணைவு இல்லாமல் இருந்தால் மட்டுமே உங்கள் காதல் ஜெயிக்கும்.
உங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை comment box ல் தெரிவியுங்கள் நண்பர்களே.....
0 Comments