கால புருஷத் தத்துவப்படி குரு இரண்டாம் மற்றும் ஏழாம் வீடுகளில் இருந்தால் ஜாதகர் அழகாக இருப்பார். தன்னை அழகுப்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார். ஆபரணங்கள் ,ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஈடுபாடு காட்டுவார்.....எதிர்பாலின கவர்ச்சி அதிகம் இருக்கும்.சொகுசு வாழ்க்கை வாழ விரும்புவார்.
ஐந்தாம் வீட்டில் குரு இருந்தால் நிர்வாகத்திறமை அதிகம் இருக்கும். ஆளுமைத்திறன் மேலோங்கும். பொது காரியங்களில் முன்னிலை வகிப்பார். தன்னை முதன்மையாக காட்டிக் கொள்வதில் திருப்தி அடைவார்.அது தவறும் போது முதன்மையாக இருக்க போட்டியிடுவார்.தந்தை மீது பற்று இருக்கும்.
ஒன்பது மற்றும் பன்னிரண்டாம் இடங்களில் இருக்கும் போது மக்களிடையே கௌரவமான நபராக இருப்பார். குருவுடன் சேரும் மற்ற கிரகங்களின் தன்மையை கொண்டு குணத்தில் மாற்றம் ஏற்படும்.
பத்து மற்றும் பதினொன்றாம் இடங்களில் இருக்கும் போது சிறுவயதில் அல்லது படித்து கொண்டிருக்கும் போதே வேலைக்கு செல்வார். குடும்ப பொறுப்பை சிறுவயதிலேயே ஏற்பார். தொழில் திறமை அதிகம் இருக்கும். எந்த சூழ்நிலையையும் சமாளித்து நிலைமையை தனக்கானதாக மாற்றிக்கொள்வார்.
0 Comments