Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

இன்றைய பலன் (22.2.24)

 இந்த பலன் எல்லா ராசிக்காரர்கள் லக்கினக்காரர்களுக்கும் பொருந்தும்

பலன்கள்:

இன்று உங்களுக்கு நிர்வாகம் சம்மந்தப்பட்ட வேலைகளில் ஆர்வம் ஏற்படும். முன்னேற்றம் உண்டு.

உங்கள் பேச்சுத்திறன் கூடும். 

உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அதற்கான செயல்பாடுகளில் இறங்குவீர்கள்.

குழந்தைகள் பற்றி கவலை ஏற்பட்டு சரியாகும்.அவர்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

பணவரவு அதிகரிக்கும்.

முன்வரிசை பற்களுக்கு மருத்துவம் எடுத்து பற்களை அழகாக்க ஆசை ஏற்படும்.

எந்த செயலிலும் யோசித்து தீர்க்கமான முடிவு எடுப்பீர்கள்.

தங்கநகைச்சீட்டு ஆரம்பிக்கும் எண்ணம் உண்டாகும். தங்கம் வாங்குவீர்கள்.

தொழில் விருத்தி செய்யும் யோசனை ஏற்படும். பார்ட்னர்ஷிப்பை தவிர்க்க வேண்டும்.

மஞ்சள் காமாலை , கல்லீரல் நோய் உள்ளவர்கள் விரைவில் குணமடைவீர்கள்.

யாரிடமும் பகைத்து கொள்ளாமல் அனுசரித்து செல்வீர்கள்.

யோகா உடற்பயிற்சி செய்து உடலை பராமரிக்கும் பழக்கம் ஏற்படும்.

உங்களை அழகுபடுத்தி கொள்வதில் ஆர்வம் உண்டாகும்.

ஆடம்பரமான இடங்களுக்கு சென்று வருவீர்கள்.

தற்கொலை , பணம், நகை  இழப்பு பற்றிய செய்திகள் இன்று‌ பிரபலமாகும்.  

உங்கள் சகோதரிக்கு அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

மிகசிலருக்கு தன்னம்பிக்கை குறையும். சம்பந்தமில்லாத பயம் ஏற்படும். தனிமையை தவிர்க்கவும்.

குடல்புண், ஹெர்னியா, அப்பன்டிக்ஸ் ஆகிய குடல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு தகுந்த சிகிச்சை கிடைக்கும்.இந்நோய்கள் பற்றி கேள்விப்படுவீர்கள்.

பணம், நகை, சீட்டு பிடித்தல் ஆகிய விஷயங்களால் கௌரவத்திற்கு பங்கம் ஏற்படலாம்.கவனம் தேவை.

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

கந்துவட்டி, பைனான்ஸ், சிட்பண்ட்ஸ் சம்மந்தப்பட்ட செய்திகள் வலம் வரும்.

அகிலா, பொன்,ஹேமா,ராஜ், தங்கம், பிரசாந்த்,குமார், குருமூர்த்தி, செல்வம், செல்வி, உலகநாதன், அகிலேஷ், பிரபஞ்சன், ஆகிய பெயர் உள்ளவர்களை சந்திப்பீர்கள் அல்லது அவர்கள் பற்றி பேசுவீர்கள்.

இன்று சந்தனம், மஞ்சள், வெள்ளை, இளஞ்சிவப்பு நிற ஆடைகள் அணிவீர்கள்.

6,15,3,24,12,30, ஆகிய எண்கள் பயன்பாடுகள் அதிகம் இருக்கும்.

ஜாதகம் பார்க்க:

ஆதவா ஜோதிட மையம்
9943818081
















Post a Comment

0 Comments