காம்பவுண்ட் எஃபெக்ட் தொடர்ச்சி.....
adhavajodhidamaiyyam.blogspot.com
ஜோதிடத்தில் கூட்டு விளைவை(காம்பவுண்ட் எஃபெக்ட்) ஏற்படுத்தும் கிரகம் ராகு/கேது ஆகும். கேதுவை விட ராகு இந்த விளைவை சிறப்பாக ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாது..
ராகுவுடன் இணையும் எந்த கிரகமும் கொஞ்சம் அதிகமாகவே வேலை செய்யும். அது நல்லதாக இருந்தாலும் சரி.. கெட்டதாக இருந்தாலும் சரி.. கொடுத்த காசை விட கொஞ்சம் கூடுதலாகவே கூவும் இந்த இணைவு... உதாரணமாக சொன்னால் சனியுடன் இந்த கிரகம் சேர்ந்தால் ஒரு வேலை செய்தால் மட்டும் போதும் என்று தோன்றாது... பல வேலைகளை செய்ய வைக்கும்..
வேலை சம்மந்தப்பட்ட விஷயங்களில் சிறியதாக செய்ய விடாமல்.. அகலக்கால் வைக்கவே செய்யும்... அப்புறம் என்ன... அளவுக்கு மீறி ஆசைப்பட்டால் என்ன ஆகும் என்று உங்களுக்கே தெரியும்...
மிகப் பெரிய அளவில் கடன்பிரச்சினை இருக்கும் ஜாதகர்களின் ஜாதகத்தை திறந்து பார்க்காமலே ஜாதகத்தில் என்ன இணைவு இருக்கும் என்று சொல்லிவிடலாம்... வேறு என்ன ... நம்ம ராகுவுடன் மங்களகாரகனின் இணைவு தான்...இது போன்ற இணைவு உள்ளவர்களுக்கு கடன் கரையான் புற்று போல அசுர வேகத்தில் வளரும்.கடன் கொடுப்பவர்கள் தேடி வருவார்கள்... இவர்களும் கடன் தருபவர்கள் ...பேங்க்குகளை நோக்கி செல்வார்கள்... கிட்டதட்ட இவர்களை போன்றவர்கள் தான் வங்கி ஊழியர்களுக்கு கடவுள்... அவர்களுக்கு டார்கெட் முடிக்க இவர்களை அணுகினால் போதும்.. தேவையான டாக்குமெண்ட் எப்போதும் கையில் வைத்திருப்பார்கள்...உடனே கடன் கிடைத்துவிடும்
இது போல் ராகு மற்ற கிரகங்களுடன் இணையும் போது காம்பவுண்ட் எஃபெக்ட் உடன் அதிகமான பலன்களை வழங்கும்...
தொடரும்...
#ராஜநாடி
உங்கள் ஜாதகப்பலனை அறிய
தொடர்பு கொள்ளவும்:
#ஆதவாஜோதிடமையம்
கரந்தை,
தஞ்சாவூர்-2
#9943818081
0 Comments