ராகு கேது பெயர்ச்சி பலன்கள் முதல் பகுதியில் செவ்வாய் இருக்கும் வீட்டைப் பொறுத்து எவையெவற்றில் கவனமாக இருக்க வேண்டும் என பார்த்தோம்.. இரண்டாவது பகுதியில்.... இந்த பெயர்ச்சி மட்டும் அல்ல எந்த பெயர்ச்சி வந்தாலும் பெரும்பாலும் எல்லாரும் தேடும்... தொழில், வேலை பற்றிய பலன்களை தான் பார்க்கப் போகிறோம். தற்போது கொரானா பாதிப்பில் பலர் வேலை வாய்ப்பு இழந்துள்ளதால், இந்த தேடல் இன்னும் வலுப்பெற்றுள்ளது என்றே சொல்லலாம்...
ஜோதிடத்துறையானது நவ கிரகங்களின் இயக்கத்தால் மனித வாழ்வில் ஏற்படும் தாக்கத்தை தெளிவாக எடுத்து கூறி வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளது என்றே கூறலாம்.. ஒன்பது கிரகங்களில் தொழில் பற்றி குறிக்கும் கிரகம் சனி ஆகும். சனி கோள் இணையும் கிரகங்களைப் பொறுத்து தொழில் மனிதருக்கு அமைகிறது..கடந்த ஒன்றரை வருடமாக வேலை தொழில் ஆகியவற்றில் சிக்கல்களை சந்தித்தவர்கள் பிறப்பு ஜாதகத்தில் சனி கிரகமானது. ..தனுசு,மிதுனம்,கும்பம், மேஷம், சிம்மம்,துலாம் ஆகிய வீடுகளில் இருப்பவர்களுக்கும் ,இரட்டைப்படை ராசிகளில் சனி வக்கிரமாக இருக்கும் ஜாதகர்களுக்கும் இருந்திருக்கும்.. இவர்களுக்கு வேலை செய்ய்யும் இடங்களில் வேலை இழப்பு, உயர் அதிகாரிகளின் தொந்தரவு, பணி உயர்வினமை, வேலையில் நிம்மதியின்மை, விரக்தி , தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் லாபமின்மை, தொழிலாளிகளால் பிரச்சினை, விரக்தி, ஈடுபாடின்மை ஆகியவை இருந்திருக்கும்..வரும் ராகு-கேது பெயர்ச்சி( செப்டம்பர் 23,2020)க்கு பின் இவை அனைத்திலிருந்தும் மேற்கண்ட ராசிகளில் சனி இருக்கும் ஜாதகர்கள் படிப்படியாக விடுபடுவீர்கள்.
தற்போதுஏற்படும் ராகு-கேது பெயர்ச்சியானது இரட்டைப்படை ராசிகளில் சனி கிரகம் உங்கள் ஜாதகத்தில் இருந்தால் உங்கள் பணியிடங்கள் பணிப்பளு மற்றும் நெருக்கடிகளை பொறுமையாக கையாளுங்கள்.. அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளால் வேலை இழப்பு ஏற்படலாம் என்பதால் சூழ்நிலையை கையாள பழகுங்கள். இந்த பெயர்ச்சியானது பல அனுபங்களை உங்களுக்கு தந்து உங்களின் திறமைகளை வெளிக்கொணரும்..ஏனென்றால் கடினமான சூழ்நிலைகளே நமக்குள்ளிருக்கும் உள்ளார்ந்த திறமைகளே வெளிக் கொணரும் என்றால் மிகையில்லை..நண்பர்களே...... தொழிலிலும் கவனமாக செயல்படுங்கள்... விருச்சிகம், கடகம், மீனம் ஆகிய ராசிகளில் சனி இருக்கும் ஜாதகர்கள் ஆன்மீக ஈடுபாடு,பொது நல ஈடுபாட்டை வளர்த்து கொள்ளுதல், பிறருக்கு உதவுதல் மூலமாகவும் வேலை மற்றும் தொழிலில் ஏற்படும் விரக்தியில் இருந்து விடுபட வாய்ப்பு உண்டு..
மற்ற கிரகங்களின் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் அடுத்தடுத்த பதிவுகளில் தொடரும்....
adhavajodhidamaiyyam.blogspot.com
ராஜநாடி ஜோதிடன் k.மோகன்
ஆதவா ஜோதிட மையம்
கரந்தை மார்கெட்
கரந்தை
தஞ்சாவூர்-2
9943818081
0 Comments