Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

Ragu ketu peyarchi palangal - 3

                                           


 சென்ற பதிவின் தொடர்ச்சி 

    கொரானா நேரத்திலும் தொழில் தொடங்கியவர்கள் ஜாதகத்தில் சனி கிரகமானது தனுசு, மகரம்,கும்பம் ஆகிய ராசிகளில் வக்கிரம் ஆக இருக்கலாம்.. சனி வக்கிரமாக உள்ளதா என் அறிந்து கொள்வதில் சிரமமாக இருந்தால் உங்கள் பிறப்பு ஜாதகத்தில் சனி

மேற்கண்ட ராசிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் சனி இருக்கும் வீட்டை ஒன்று என எடுத்துக்கொண்டு கடிகாரம் சுற்றும் திசையில் ஐந்து, ஆறு,ஏழு,எட்டு,ஒன்பது ஆகிய வீடுகளில் சூரியன் இருந்தால் சனி பெரும்பாலும் வக்கிரமாக உள்ளது என எடுத்து கொள்ளலாம் .... மேலும் சிலரின் ஜாதகத்தில் சூரியன் கிரகமானது கும்பம், மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு, துலாம் ஆகிய வீடுகளில் இருக்கலாம்..இந்த அமைப்பும் ஜாதகரை தொழில் தொடங்க தூண்டியிருக்கும்...

----------------------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------------------

ராகு/கேது பெயர்ச்சி பலன்கள் - 3 

இது வரை செவ்வாய் மற்றும் சனி ஆகியவை உங்கள் ஜாதகத்தில் எங்கிருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்த்தோம்... இனி சுக்கிரன் கிரகம் பற்றி காண்போம்... தனுசு, சிம்மம், மேஷம் ஆகிய ராசிகளில் சுக்கிரன் இருக்கும் ஆண் ஜாதகர்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு,பிரிவு, மனம் வெறுத்து போதல் ,சட்ட பூர்வமாக விவாகரத்து ஆகியவை நடந்திருக்கும்..கருத்து வேறு பாடு மற்றும் பிரச்சினை இருந்தவர்கள் வரும் செப்டம்பர் 13ந் தேதிக்கு பிறகு மீண்டும் இணைவார்கள். மேலும் மிதுனம், கும்பம், துலாம் ஆகிய ராசிகளில் சுக்கிரன் இருக்கும் ஆண் ஜாதகர்களுக்கு மனைவியுடன் இருந்த பிரச்சினைகள் இந்த ராகு கேது பெயர்ச்சிக்கு பின் சரி ஆகும்... பெண்களுக்கு தங்கள் தோழிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு, பிரச்சினைகள் சரியாகும்....பொதுவாக எல்லாருக்கும் வீண் செலவு, பணம் கடன் வாங்குதல், திருமணம் நடப்பதில் பிரச்சினைஆகியவை இருந்திருக்கும் இவை அனைத்தும் வரும் செப்டம்பர் 13 க்கு பின் படிப்படியாக சரியாகும்....

    மேற்கண்ட வீடுகளில் சுக்கிரன் இருக்கும் ஆண்,பெண் இருவருக்குமே செப்டம்பர் 13க்கு பின் இரண்டு மாதங்களுக்குள் திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் நேரத்தை பயன்படுத்தி கொள்ளுதல் நலம்பயக்கும்....


    ரிஷபம், மகரம், கன்னி ஆகிய ராசிகளில் சுக்கிரன் இருக்கும் ஆண் ஜாதகர்களுக்கு மனைவியுடன் பிரிவு, பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் அது போல சூழ்நிலைகளினை தவிர்த்தல் நலம். மேலும் விருச்சிகம், கடகம், மீனம் ஆகிய ராசிகளில் சுக்கிரன் உள்ளவர்கள் அடுத்த ராகு-கேது பெயர்ச்சி வரை திருமண உறவில் அவசரப்பட்டு எந்த முடிவுகளும் எடுக்காமல் இருத்தல் பிரிவு, பிரச்சினைகள், சட்டப்பூர்வ நடவடிக்கைகளிருந்து காக்கும்....அதைப்போல வரவிருக்கும் ராகு கேது பெயர்ச்சி மேற்கண்ட ராசிகளில் சுக்கிரன் உள்ளவர்களுக்கு பணவரவையும் அதிகப்படுத்தும்...அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.... 

    உங்கள் ஜாதகப்பலன்களை நேரடியாக அறிய விரும்பினால்.... கீழ்க்கண்ட முகவரியில் அணுகவும்...


ராஜநாடி ஜோதிடர்K.மோகன்
ஆதவா ஜோதிட மையம்
கரந்தை மார்கெட்
கரந்தை
தஞ்சாவூர்-2
Ph:9943818081

Post a Comment

0 Comments