எஸ்.பி மேடம்... உங்கள பிரின்சிபால் சார் கூப்பிடுறாங்க....னு ...ஓ.ஏ கண்ணையன் வந்து சொன்னதும்....எடுத்து கொண்டிருந்த வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பிரின்சிபால் அலுவலகம் நோக்கி நடந்தாள்....பானு...
மனதில் சின்ன குழப்பம் அவளுக்கு...பிரின்சிபால் எதற்காக கூப்பிட்டிருப்பார் என்று புரியாமல்... அவளுக்கு மனதில் பயமில்லை அவரிடம்... இருந்தாலும் ஒரு ஓரத்தில் சின்ன ஆவல் கலந்த கலக்கம்... எக்ஸ்கியூஸ் மீ சார்.... என அலுவலக கதவை திறந்து கொண்டு அனுமதி கேட்டாள்... பிரின்சிபால்க்கு முன்னர் சீட்டில் ஒரு பையனும் ஒரு அம்மாவும் உட்கார்ந்திருந்தனர்.. பானுவை எதிர்பார்த்து இருந்தவர் மலர்ந்த முகத்துடன் உள்ள வாங்கம்மா...என்று அழைத்தார்...
இவங்க என்னுடைய ரிலேட்டிவ்... தம்பி +2 முடித்து விட்டான்... மேற்படிப்பு என்ன படிக்கலாம் னு ஒரு கன்ஃப்யூஷன்... என்னை பார்க்க நான் வந்தாங்க....உடனே நீங்க தான் மைண்ட் ல ஸ்ட்ரைக் ஆனீங்க... நான் சொல்றத விட நீங்க கைடு பண்றது பெட்டர்னு தோணுச்சு.... நீங்க தானே நம்ம ஸ்கூல்லயே பி.எச்.டி முடிச்சிருக்கீங்க... கரெக்டா கைடு பண்ணுவீங்க னு தான் உங்கள வரச்சொன்னேன் மா...னு சொன்னதும் தான் நிம்மதி பெருமூச்சு விட்டாள்...பானு....
சந்தோஷமாக அந்த பையனையும் அவங்க அம்மாவையும் அவளது கேபினுக்கு அழைத்து சென்று... எந்த படிப்பை தேர்வு செய்யலாம் என்பதை கூறி அனுப்பி வைத்தாள்... அவர்கள் போனதும் தான் எப்படி படித்தோம் என்பதை நினைத்து பார்த்தாள்... அவளுக்கே பிரமிப்பாக இருந்தது... பள்ளி படிப்பை அவள் முடிப்பாள் என்று அவர்கள் குடும்பத்தில் யாருமே நினைக்கவில்லை... அவளையும் சேர்த்து தான்..... அதன் பின்னர் கல்லூரி மேற்படிப்பில் சேர்வதில் குழப்பம் ஏற்பட்டு படிப்பில் சேர்ந்த பிறகு தான்... அவள் படிப்பு திறமை மீது அவளுக்கே நம்பிக்கை பிறந்தது.... #பி.#எச்.#டி வரை விடாமல் படித்தாள்....
பள்ளிப் படிப்பில்... படிப்பு என்றாலே பயந்த அவள் எப்படி பி.எச்.டி படித்தாள் என்று ஆச்சரியமாக உள்ளதா.... அவளது ஜாதகத்தில்... புதன் வக்கிரமாகி சூரியன்கேதுவுடன் இணைவு பெற்றுள்ளது... இந்த இணைவு இருந்தால் ஜாதகர் ஆரம்பத்தில் படிப்பு சுமாரா படித்தாலும் ..பின்னர் அதையே ரசித்து படிப்பாங்க...நிறைய படிப்பு படிப்பாங்க....
#ராஜநாடி
0 Comments