ஜோதிடத்தில் சந்திரன் தாயை குறிக்கும்..
ஒருவர் ஜாதகத்தில் சந்திரனோடு அங்காரகன் இணைவு பெற்றிருந்தால் அவரது தாய் கோபக்காரராகவும் உள்ளத்தில் பட்டதை உடனே...... செய்பவராகவும் இருப்பார்.செங்கதிரோன் இணைவு பெற்றிருந்தால் குடும்ப நிர்வாகத்தை தானே ஏற்பார் அல்லது நிர்வாகம் இவரை தேடி வரும். நல்ல தலைமைப் பண்பு கொண்டவராகவும் இருப்பார்.. கணக்கன் இணைவு பெற்றிருந்தால் கல்வி ஞானம் உள்ளவராகவும் கல்வி கற்றிருக்காவிடில் கற்றவரை போன்ற புத்திசாலித்தனம் உள்ளவராகவும்.. நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவராகவும் நல்ல சொல்லாட்சி திறன் கொண்டவராகவும் இருப்பார்..செம்பாம்பு இணைவு பெற்றிருந்தால் ஆன்மீக நாட்டம் பொதுகாரியங்களில் ஈடுபாடு கொண்டவராகவும் இருப்பார்...
மற்ற கிரகங்கள் இணைவு அடுத்த பதிவில் தொடரும்....
0 Comments